ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி.,க்களின் பலம் 113 ஆக அதிகரிப்பு!
28 சித்திரை 2026 செவ்வாய் 12:22 | பார்வைகள் : 1994
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஏழு எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியமானதை அடுத்து, ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை, சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்து, இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், முக்கியமான அரசியல் சாசன சட்டத்தை திருத்துவதற்கு தேவையான மூன்றில் இரு பங்கு பலத்தை தே.ஜ., கூட்டணி நெருங்கவுள்ளது.
ஆம் ஆத்மியின் தேசிய முகமாக அறியப்பட்டவர், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராகவ் சத்தா. இவருக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சமீப காலமாக உரசல் இருந்தது.
விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடைகள் அமைத்ததற்காக, பா.ஜ., அரசை சமீபத்தில் ராகவ் சத்தா பாராட்டினார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா துணை தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதில், ஆம் ஆத்மியின் மற்றொரு எம்.பி.,யான அசோக் மிட்டல், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடும் அதிருப்தியடைந்த ராகவ், கடந்த வாரம் ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் மொத்தம் உள்ள 10 ஆம் ஆத்மி எம்.பி.,க்களில் தன்னுடன் சேர்த்து ஏழு பேர் பா.ஜ.,வில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், ராகவ் சத்தா அறிவித்தபடி அவருடன் சேர்த்து அசோக் குமார் மிட்டல், ஹர்பஜன் சிங், சந்தீப் குமார் பதக், டாக்டர் விக்ரம்ஜித் சிங் சாஹ்நே, ஸ்வாதி மாலிவால் மற்றும் ராஜேந்தர் குப்தா ஆகியோர் ஆம் ஆத்மியில் இருந்த விலகி பா.ஜ.,வில் இணைந்தனர்.
பத்தாவது அட்டவணையின்படி, ஒரு கட்சியில் இருந்து மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு மாறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும், ஏழு பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஆராய்ந்த அவர், அம்மனுவை தள்ளுபடி செய்து, ஏழு பேரின் இணைப்பும் செல்லும் என நேற்று அறிவித்தார். இந்த இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்யசபா செயலகத்தின் ஆவண பதிவேடுகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஏழு எம்.பி.,க்களின் பெயர்கள் பா.ஜ., - எம்.பி.,க்கள் பட்டியலின் கீழ் இடம்பெற்றுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire