2026 ஐபிஎல் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி
28 சித்திரை 2026 செவ்வாய் 12:38 | பார்வைகள் : 2024
ஐபிஎல் வரலாற்றில் 9000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை கோஹ்லி படைத்தார்.
28.04.2026 நடந்த ஐபிஎல் 2026 போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி ஹேசல்வுட் மற்றும் புவனேஷ்வர்குமாரின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 16.3 ஓவர்களை வரை தாக்குப்பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் 75 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஷ் ஹேசல்வுட் (Josh Hazlewood) 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் 77 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேவ்தத் படிக்கல் 34 (13) ஓட்டங்களும், விராட் கோஹ்லி 23 (15) ஓட்டங்களும் எடுத்தனர். இப்போட்டியில் கோஹ்லி (Kohli), ஐபிஎல் வரலாற்றில் 9000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா (7,183), ஷிகர் தவான் (6,769), டேவிட் வார்னர் (6,565), கே.எல்.ராகுல் (5,580) ஆகியோர் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire