ஆப்பிளின் iPhone Ultra, MacBook Ultra குறித்து கசிந்துள்ள தகவல்
28 சித்திரை 2026 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 2286
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு தனது முதல் மடிக்கக்கூடிய iPhone-ஐ அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
iPhone Ultra எனப்படும் இந்த புதிய மொடல், புத்தக வடிவில் மடிக்கக்கூடியதாக இருக்கும். இது iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உடன் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான வடிவமைப்பு வரைபடங்கள், இந்த மடிக்கக்கூடிய iPhone-இன் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
முன்னதாக 'iPhone Fold' அல்லது 'iPhone Ultra' என பெயரிடப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது iPhone Ultra என்ற பெயரே உறுதியாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனுடன், ஆப்பிள் தனது MacBook வரிசையில் புதிய 'MacBook Ultra' மொடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
OLED டச் ஸ்கிரீன் கொண்ட இந்த லேப்டாப், ஆப்பிள் MacBook வரிசையில் முதல் முறையாக டச் வசதி கொண்டதாக இருக்கும்.
ஆனால், RAM மற்றும் மெமரி பற்றாக்குறை காரணமாக, இதன் வெளியீடு 2027-க்கு தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும், 'Ultra' பிராண்டிங், Apple Watch Ultra போலவே, iPhone மற்றும் MacBook-இல் புதிய அடையாளமாக அமையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire