அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை; சென்னை ஐகோர்ட்
29 சித்திரை 2026 புதன் 06:14 | பார்வைகள் : 1644
அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் விளக்கம் அளித்துளளது.
நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு அதிமுக எம்பி இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்கை பதிவு செய்யுமாறு லஞ்ச ஓழிப்புத்துறைக்கு உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என்று கூறி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். அதே நேரத்தில் வழக்குப் பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு தமிழக அரசும், அமைச்சர் கேஎன் நேரு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நேரு தரப்பில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு முன்பாக தமது தரப்பு வாதங்கள் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை, முறைகேடு தொடர்பாக வழக்கு மட்டுமே பதிய உத்தரவிடப்பட்டது என்று கூறினர். இந்த வழக்கில் விரிவான விசாரணைகள் வைக்க வேண்டும் என்பதால் விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளி வைக்கலாம் என்று கூறினர்.
நேரு தரப்பில், அது வரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும என்று கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, தமிழக அரசு, நேரு மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரை தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையில் ஜூன் 4வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire