மொபைல் திட்டங்களை அறிமுகபடுத்தும் Lidl!
28 சித்திரை 2026 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 4379
Lidl, Carrefour மற்றும் E.Leclerc போன்ற பெரிய விற்பனை நிறுவனங்களைப் பின்பற்றி, தனது கடைகளிலும் Lidl Plus பயன்பாட்டிலும் கிடைக்கும் புதிய மொபைல் திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தொலைத்தொடர்பு தீர்வுகளில் முன்னோடியாக உள்ள 1Global நிறுவனத்துடன் கூட்டாண்மை செய்து, அதன் தொழில்நுட்ப ஆதரவினைப் பயன்படுத்த உள்ளது.
இந்த முயற்சியின் மூலம் Lidl ஒரு மெய்நிகர் மொபைல் நெட்வேர்க் இயக்குநராக (MVNO) செயல்படும். அதாவது, தனிப்பட்ட நெட்வொர்க் இல்லாமல், ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு அமைப்புகளை வாடகைக்கு எடுத்து சேவைகளை வழங்கும். இதே மாதிரி முறை Lidl Connect என்ற பெயரில் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே செயல்படுகிறது.
பிரான்சில் மொபைல் சந்தை மிகவும் போட்டி நிறைந்ததாக இருப்பதால், புதிய நிறுவனங்களுக்கு இடம் பிடிப்பது கடினம். இருந்தாலும், Lidlக்கு நாடு முழுவதும் பரவியுள்ள அதன் கடை வலையமைப்பு ஒரு முக்கிய பலமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக கடையில் திட்டங்களில் சேர முடியும் என்பதால், இது மற்ற போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுகிறது.
இப்போது வரை திட்டங்களின் விலை மற்றும் ஆரம்ப திகதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் Lidl சந்தையில் நுழைவதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகள் மற்றும் குறைந்த விலை வாய்ப்புகள் உருவாகலாம். அதன் குறைந்த விலை கொள்கையை கருத்தில் கொண்டால், இது மொபைல் சேவை சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire