பிரான்ஸ்–அல்ஜீரியா உறவில் முன்னேற்றம்: நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மீண்டும் தொடக்கம் !!
29 சித்திரை 2026 புதன் 07:45 | பார்வைகள் : 4472
பிரான்ஸ் – அல்ஜீரியா இடையிலான இருதரப்பு உறவுகளை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர் Laurent Nuñez கடந்த பிப்ரவரி மாதம் அல்ஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணம், நீண்டநாட்களாக நிலவி வந்த அரசியல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தளர்த்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.
இதன் பின்னணியில், சமீப வாரங்களில் பிரான்ஸிலிருந்து அல்ஜீரியாவுக்கு நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அல்ஜீரிய அதிகாரிகள் வழங்கிய “laissez-passer consulaires” எனப்படும் பயண அனுமதி ஆவணங்கள் காரணமாக இத்தகைய நடவடிக்கைகள் சாத்தியமானதாகியுள்ளன. இந்த ஆவணங்கள், பிரான்ஸில் இருந்து வெளியேற்ற உத்தரவுகளை (OQTF) நடைமுறைப்படுத்த அத்தியாவசியமானவை ஆகும்.
பிரான்சுக்கும் மற்றும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான இராஜதந்திர பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் சில முக்கிய விவகாரங்களில் ஏற்பட்ட முடக்கங்கள் உறவுகளை பாதித்தன. இருப்பினும், பிப்ரவரி மாத பயணத்திற்கு பிந்தைய நாட்களில் ஒத்துழைப்பு மீண்டும் உருவாகத் தொடங்கியது. இதன் விளைவாக, சமீபத்தில் ஒரே நாளில் ஏழு பேரை அல்ஜீரியாவுக்கு திருப்பி அனுப்பிய சம்பவமும் பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் தரப்பில், வெளியேற்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் முனைப்புக் காணப்படுகின்றது. அதேசமயம், அல்ஜீரியா தரப்பு இந்த முன்னேற்றத்தை எச்சரிக்கையுடன் அணுகி, இருதரப்பு உறவுகளை மெதுவாக சீரமைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் உறவுகள் மேலும் மேம்படும் வாய்ப்பு இருப்பினும், இன்னும் சில கருத்து முரண்பாடுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire