செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
29 சித்திரை 2026 புதன் 11:42 | பார்வைகள் : 2128
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, தமிழக மின்சார வாரியத்தில் அமைச்சராக,செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு தமிழக மின்சார வாரியம் (டான்ஜெட்கோ), தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire