சாய் பல்லவி ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறுவாரா ?
29 சித்திரை 2026 புதன் 13:47 | பார்வைகள் : 2167
'இந்தியாவில் இப்போதைய நடிகைகளில் சிறந்த நடிகை சாய் பல்லவி' என ஹிந்தி நடிகர் அமீர்கான் பாராட்டிய தமிழ் நடிகையான சாய் பல்லவி 'ஏக் தின்' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார். அமீர்கான் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்தப் படம் மே 1ம் தேதி வெளியாகிறது.
தமிழகத்திலிருந்து ஹிந்திக்குச் சென்று பிரபலமாகி அவரவர் காலகட்டங்களில் சில நடிகைகள் புகழ் பெற்றிருக்கிறார்கள். கருப்பு வெள்ளை காலங்களில் தமிழில் அறிமுகமான ஓரிரு வருடங்களிலேயே ஹிந்தியில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் வைஜெயந்தி மாலா.
தமிழில் 'காலம் மாறிப் போச்சு, அலிபாபாவும் 40 திருடர்களும்' ஆகிய படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனமாடியவர் வகிதா ரஹ்மான். அதன்பின் ஹிந்தியில் அறிமுகமாகி பல வருடங்கள் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
தமிழில் 'இது சத்தியம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் ஹேமமாலினி. அதன்பின் ஹிந்தியில் அறிமுகமாகி அவரும் பல வருடங்கள் முன்னணி நடிகைகளில் ஒருவராக புகழ் பெற்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக பெயர் பெற்ற போதே ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கு புகழ் பெற்ற கதாநாயகியாக பல வருடங்கள் இருந்தவர் ஸ்ரீதேவி.
அவர்களுக்குப் பின் சில பல தமிழ் நடிகைகள் ஹிந்திப் பக்கம் போனாலும் மேலே குறிப்பிட்டவர்கள் அளவிற்குப் பிரபலமாகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிலிருந்து சாய் பல்லவி ஹிந்திப் பக்கம் போகிறார். ஏற்கெனவே மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில நல்ல படங்களில் நடித்து பெயர் பெற்றவர். 'ஏக் தின்' படம் அவருக்கு எப்படியான அறிமுகமாக அமையப் போகிறது என்பதைப் பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.
இந்தப் படத்திற்குப் பிறகு 'ராமாயணா' ஹிந்திப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire