தமிழக மின் தேவை புதிய உச்சம்: 21,211 மெகாவாட்டாக அதிகரிப்பு
30 சித்திரை 2026 வியாழன் 06:50 | பார்வைகள் : 1888
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும், வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், மாநிலத்தின் மின் தேவை, நேற்று முன்தினம், 21,211 மெகாவாட்டாக, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் முதல் கோடை காலம் தொடங்கியது. ஏற்க னவே, மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பால், மின் தேவை அதிகரித்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதுடன், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளால், பல வீடுகளில் காலை முதல் நள்ளிரவு வரை, டிவி மற்றும், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
மேலும், வணிக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்களில் மின் அடுப்பு பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தமிழக மின் தேவை, கடந்த மார்ச் இறுதியில், 20,000 மெகாவாட்டை தாண்டிய நிலையில், இம்மாதம், 21ம் தேதி, 21,060 மெகா வாட் என்ற உச்சத்தை எட்டியது. அதை விட அதிகமாக, 27ம் தேதி, 21,117 மெகா வாட்டாக அதிகரித்தது.
வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இதனால், எப்போதும் இல்லாத வகையில், 28ம் தேதி இரவு, 10:30 மணிக்கு மின் தேவை, 21,211 மெகாவாட் என்ற பு திய உச்சத்தை எட்டியது.
அதை பூர்த்தி செய்யும் அளவு மின்சாரம் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire