வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை
30 சித்திரை 2026 வியாழன் 17:48 | பார்வைகள் : 1843
வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது.
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சில்ஹெட்டில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து 37 பந்துகளில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ஓட்டங்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடிய ஹர்ஷிதா சமரவிக்ரமா 29 பந்துகளில் 49 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
நிலாக்ஷி ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 154 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவர்களில் 133 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக ஷர்மின் அக்தர் 44 ஓட்டங்களும், ஜூவாரியா 29 ஓட்டங்களும், திலரா 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்றியது. முன்னதாக ஒருநாள் தொடரையும் வென்றிருந்தது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire