டூரிஸ்ட் பேமிலி'க்கு தேசியவிருது கிடைக்குமா?
1 வைகாசி 2026 வெள்ளி 16:44 | பார்வைகள் : 2137
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' இன்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 90 கோடி வரை இந்த படம் வசூலித்து, தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை பெற்றுக்கொடுத்து.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் பசிலியான், சவுந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து தயாரித்த 'வித் லவ்' படத்தில் இயக்குனர் அபிஷன் ஹீரோவாக அறிமுகமாக வெற்றியும் பெற்றார். படத்தின் இயக்குனர் அபிஷன், ஹீரோ சசி, ஹீரோயின் சிம்ரன் ஆகியோர் பல்வேறு சினிமா விழாக்களில் இந்த படத்துக்காக விருது பெற்றனர்.
இந்நிலையில், படம் தேசிய விருதை பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல், டூரிஸ்ட் பேமிலி கூட்டணி மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வித்லவ் படத்தில் ஹீரோவாக நடித்த அபிஷன் தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறாராம். ஆனாலும், அடுத்த அவர் படம் இயக்கும் பட்சத்தில் இந்த கம்பெனிக்கு படம் பண்ணலாம். அது 'டூரிஸ்ட் பேமிலி 2'வாகக்கூட இருக்கலாம் எனத் தகவல்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire