அடுத்து பெட்ரோல், டீசல் மீது தாக்குதல்: ராகுல் ஆரூடம்
2 வைகாசி 2026 சனி 06:18 | பார்வைகள் : 2124
முதலில் சமையல் எரிவாயுவின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது தாக்குதல் நடக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு பிறகு பணவீக்கத்தின் தாக்கம் இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இன்று வணிக சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் விலை உயர்ந்துள்ளது இதுவே ஆகும்.
பிப்ரவரி முதல் தற்போது வரை 1,380 ரூபாய் உயர்ந்துள்ளது. 3 மாதங்களில் 81 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. தேநீர் கடைகள், சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என ஒவ்வொரு சமையலறையும் இந்த நெருக்கடியால் திணறுகின்றன. இதன் தாக்கம் உங்கள் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும். முதலில் எரிவாயுவின் மீது தாக்குதல். அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது தாக்குதல் நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire