ஐந்து இளைஞர்கள் கடுமையான மகிழுந்து விபத்தில் உயிரிழப்பு!!
1 வைகாசி 2026 வெள்ளி 20:46 | பார்வைகள் : 4222
Ardèche மாகாணத்தில் இந்த வெள்ளிக்கிழமை மே 1 அன்று ஏற்பட்ட கடுமையான மகிழுந்து விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு படையும் மாகாண ஆட்சியரும் அறிவித்துள்ளனர்.
25 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்த மகிழுந்து தீப்பற்றி எரிந்தது
தீயணைப்பு படை
உயிரிழந்தவர்கள் Rhône மாகாணத்தைச் சேர்ந்த 17 முதல் 20 வயதுள்ள ஐந்து இளைஞர்கள்
Sarras மற்றும் Vernosc‑lès‑Annonay இடையே, மகிழுந்து சாலையிலிருந்து விலகி சுமார் 25 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது, என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மாகாண ஆட்சியர்
«மோதலின் போது மகிழுந்து தீப்பற்றி எரிந்தது», மீட்புக்குழு வந்தபோது மகிழுந்து முழுவதும் தீயில் மூழ்கியிருந்தது. உள்ளே ஐந்து எரிந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன
மொத்தம் 42 தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் நீர்மூழ்கிக் குழுவும் அடங்கும்.
RD 270 சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளது.
மருத்துவ‑மனநல அவசர அணியும் (CUMP) செயல்படுத்தப்பட்டுள்ளது. Ardèche மாகாண ஆட்சியரின் அலுவலக இயக்குநர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.
மாகாண ஆட்சியர், «இந்த துயரமான சூழ்நிலையில் குடும்பங்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை» தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire