ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் மோசடி - கனேடியர்களுக்கு எச்சரிக்கை
2 வைகாசி 2026 சனி 06:23 | பார்வைகள் : 2200
ஆன்லைன் டேட்டிங் செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் நன்மைகள் பெறுவதுடன் தீமைகளும் நிகழ்கின்றது.
ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற நபர், தற்போது பிணை விதிகளை மீறியதற்காக மீண்டும் தேடப்பட்டு வருகிறார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த புரோடி ப்ரூக்ஸ் என்பவர், ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 14 பேரிடம் (பெரும்பாலானோர் பெண்கள்) பழகி, அவர்களை ஏமாற்றியதாகக் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.
சுமார் 90,000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுளள்தாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் நெருக்கமாகப் பழகி, அவசர தேவை எனப் பணம் கடன் வாங்குவதாகவும், பின்னர் பணத்தைத் திரும்பக் கேட்கும்போது அவர்களைத் தவிர்த்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023-ல் கைது செய்யப்பட்ட இவருக்கு, சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
"அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்" என்ற நிபந்தனையை அவர் மீறியதாகக் கூறி, தற்போது சானிச் (Saanich) காவல்துறை அவருக்கு எதிராகப் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
இந்த நபர் மிகவும் தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் வல்லவர்," என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மட்டுமே பழகிய எவருக்கும் ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire