ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர் பயிற்சி மைய மேலாளர் - சட்ட நடவடிக்கை தொடக்கம்!!
2 வைகாசி 2026 சனி 16:21 | பார்வைகள் : 4918
ஒய்ஸ் (Oise) பிராந்தியத்தில் உள்ள டில்லே (Tillé) ஓட்டுநர் தேர்வு மையத்தில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர் பயிற்சி மைய மேலாளர் ஒருவர் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேசிய காவல்துறையினர் சட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதி நடைபெற்ற சோதனையின் போது, தனது உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையிலும், குறித்த நபர் வாகனம் ஓட்டியதுடன், மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைய தினம் தேர்வு மையத்தில் ஆய்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வர்கள் பலரும் உடனிருந்தனர்.
மேலும், சில பயிற்சி வாகனங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது குற்றமாகும் என்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த நபருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 15,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire