டி20 கிரிக்கெட்டில் 308 ரன் குவித்த அறிமுக அணி
2 வைகாசி 2026 சனி 19:21 | பார்வைகள் : 2167
ஆஸ்திரியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேர்மனி அணி 308 ஓட்டங்கள் குவித்தது.
ஆஸ்திரியா அணி ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி 01.05.2026 நடந்தது.
முதலில் ஆடிய ஜேர்மனி அணியில் கேப்டன் முஸாத்திக் அகமது 48 பந்துகளில் 122 ஓட்டங்கள் (10 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார். அடுத்து ஷாஹித் அப்ரிடி களமிறங்க, பென் கோஹ்லர் கேட்மோர் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இதன்மூலம் ஜேர்மனி அணி 20 ஓவர்களில் 308 ஓட்டங்கள் குவித்தது. பென் கோஹ்லர் கேட்மோர் (Ben Kohler-Cadmore) 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் குவித்தார். அப்ரிடி 34 (14) ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய ஆஸ்திரியா அணி 15.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கரண்பிர் சிங் 39 பந்துகளில் 84 ஓட்டங்கள் (8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
ஜேர்மனி அணி 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஷாஹித் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், குலான் ரசூல் மற்றும் முஸ்லீம் யார் அஷ்ரப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire