கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தவில்லை; பீயூஷ் கோயல்
3 வைகாசி 2026 ஞாயிறு 10:09 | பார்வைகள் : 1893
கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை'' என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மதுரையில் தெரிவித்தார்.
பா.ஜ., வேட்பாளர்களின் ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மதுரை பெருங்குடியிலுள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. திருவாரூர், தஞ்சை, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்துார், மானாமதுரை, மதுரை தெற்கு, சாத்துார், ராமநாதபுரம், திருச்செந்துார், வாசுதேவநல்லுார், ராதாபுரம், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழக வளர்ச்சியை உறுதி செய்கின்ற அரசு அமைவதற்காக தேர்தல் முடிவுகள் இருக்கும். கருத்துக் கணிப்புகளை நாம் பொருட்படுத்தவில்லை. கருத்து கணிப்பு நடத்துபவர்கள், அவர்கள் வேலையை செய்கிறார்கள். நாம் நமது வேலையை பார்ப்போம். ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை தே.ஜ., கூட்டணி பெறும் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire