இரண்டு ரஷ்ய Su-24 விமானங்களை தடுத்து நிறுத்திய பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்கள்!!
2 வைகாசி 2026 சனி 20:44 | பார்வைகள் : 25834
பிரான்ஸ் வான்படை ரஃபேல் போர் விமானங்கள், விமானப் பயணத் திட்டமின்றி பால்டிக் வான்வெளியில் நுழைந்த இரண்டு ரஷ்ய Su-24 விமானங்களை தடுத்து நிறுத்தின. இந்த நடவடிக்கை நேட்டோவின் (OTAN) “Baltic Air Policing” பணியின் ஒரு பகுதியாக லிதுவேனியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியின் நோக்கம், தங்களுக்கே போதுமான வான்படை வசதிகள் இல்லாத பால்டிக் நாடுகளின் வான்வெளியை பாதுகாப்பதாகும். அதனால், நேட்டோ கூட்டணி நாடுகள் மாறிமாறி அங்கு தங்கள் போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு செய்கின்றன.
மார்ச் மாதம் முதல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி படைகளை மாற்றி, பிரான்ஸ் மற்றும் ருமேனியா இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளன. தற்போது நான்கு ரஃபேல் விமானங்களும் 100-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு நிலைமை இன்னும் பதட்டமாக இருப்பதால், லிதுவேனியாவில் கூட்டணி நாடுகளின் இருப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சமீபத்திய ட்ரோன் சம்பவங்களும் வான்வெளி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire