Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்ப் நிராகரிப்பால் மீண்டும் போர் அபாயம் - ஈரான் எச்சரிக்கை

ட்ரம்ப் நிராகரிப்பால் மீண்டும் போர் அபாயம் - ஈரான் எச்சரிக்கை

3 வைகாசி 2026 ஞாயிறு 09:11 | பார்வைகள் : 2166


ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச டகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் மூத்த அதிகாரியான முகமது ஜாபர் ஆசாதி இது குறித்துக் கூறும்போது, அமெரிக்கா தனது வாக்குறுதிகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் ஏப்ரல் 8 முதல் அமுலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் சமர்ப்பித்த புதிய நிபந்தனைகளில், ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவருவது மற்றும் ஈரான் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்