வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மிஷன் த்ரிஷ்டி செயற்கைக்கோள்! பிரதமர் மோடி பாராட்டு
4 வைகாசி 2026 திங்கள் 10:12 | பார்வைகள் : 1964
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளான 'மிஷன் த்ரிஷ்டி', வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனையை நிகழ்த்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் ஆப்டோசார் செயற்கைக் கோளான 'மிஷன் த்ரிஷ்டி'யை பெங்களூரைச் சேர்ந்த கேலக்ஸ்ஐ என்ற விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸிக்கு சொந்தமான பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளால் எல்லா சூழலிலும் பூமியின் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான தரவுகளை உடனுக்குடன் வழங்கும். சுமார் 160 கிலோ எடை கொண்ட 'மிஷன் த்ரிஷ்டி' செயற்கைக்கோள், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோளாகும்.
இந்த நிலையில், 'மிஷன் த்ரிஷ்டி' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் 'மிஷன் திருஷ்டி' செயற்கைக்கோள் நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய சாதனையாகும். உலகின் முதல் ஆப்டோசார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதன் மூலம், கண்டுபிடிப்புத் திறன் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாகும். இந்த சாதனையை நிகழ்த்திய கேலக்ஸ்ஐ நிறுவனத்திற்கும், ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire