ஆகஸ்ட் மாதத்தில் C1 கேபிள் போக்குவரத்து சேவை 11 நாட்கள் நிறுத்தம் – மாற்று போக்குவரத்து ஏற்பாடு!!
4 வைகாசி 2026 திங்கள் 14:26 | பார்வைகள் : 3814
ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 3 முதல் 13 ஆம் திகதி வரை C1 கேபிள் போக்குவரத்து சேவை, முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக Val-de-Marne பகுதியில் இயங்கிவரும் இந்த சேவை, இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை சேவையாற்றி முக்கியமான போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது.
தினமும் சுமார் 12,000 முதல் 13,000 பயணிகள் C1 கேபிள் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 11 நாட்கள் நிறுத்தம் காரணமாக, பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அனைத்து முக்கிய நிறுத்தங்களையும் இணைக்கும் வகையில் மாற்று பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Créteil Pointe du Lac முதல் Villeneuve-Saint-Georges வரை உள்ள அனைத்து நிறுத்தங்களுக்கும் இந்த மாற்று பேருந்து சேவை இயக்கப்படும். அதேசமயம், 428, 430 மற்றும் 427 போன்ற வழக்கமான பேருந்து சேவைகளும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். சேவை தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த கோளாறுகளையே சந்தித்துள்ள C1 கேபிள், அதன் நம்பகத்தன்மைக்காக பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire