Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் மூன்று நாட்களில் இரண்டு வகையான இயற்கைச் சீற்றங்கள்

பிலிப்பைன்ஸில் மூன்று நாட்களில் இரண்டு வகையான இயற்கைச் சீற்றங்கள்

4 வைகாசி 2026 திங்கள் 16:47 | பார்வைகள் : 2146


பிலிப்பைன்ஸ் நாடு மூன்று நாட்களில் இரண்டு வகையான இயற்கைச் சீற்றங்களை சந்தித்துள்ளது.

வார இறுதியில், Mayon என்னும் எரிமலை புகையைக் கக்கியுள்ளது. உண்மையில், எரிமலைக் குழம்பு வெளியே வீசப்படவில்லை.

அதற்கு பதிலாக, எரிமலைக்குள் படிந்திருந்த எரிமலைக்குழம்பு திடீரென எரிமலைக்குள்ளேயே சரிந்ததால் குப்பென சாம்பல் வெளியாகியுள்ளது.

வெளியான சாம்பல், மூன்று நகரங்களிலுள்ள 87 கிராமங்கள் மீது படர்ந்துள்ளது.

அதனால் யாருக்கும் அந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாதை சரியாக தெரியாததால் வாகனங்கள் மெதுவாக செல்ல நேர்ந்துள்ளது.  

அத்துடன், இன்று பிலிப்பைன்சிலுள்ள Samar என்னுமிடத்தில், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

ஆக, பிலிப்பைன்ஸ் நாடு மூன்று நாட்களில் இரண்டு வகையான இயற்கைச் சீற்றங்களை சந்தித்துள்ளது.

 

 

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்