மம்தாவை வீழ்த்தினார் சுவேந்து அதிகாரி; திரிணமுல் கோட்டை உடைந்தது
5 வைகாசி 2026 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 1779
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய பா.ஜ., அலையில் சிக்கி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, சின்னாபின்னமாகி உள்ளது. பா.ஜ., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. வெறும் 80 தொகுதிகளில் மட்டுமே திரிணமுல் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால், 15 ஆண்டு கால மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வந்து, மேற்கு வங்கத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மம்தாவின் கோட்டையான பவானிபூர் தொகுதியில், அவரை எதிர்த்து, பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இதில், மம்தா (58,812 ஓட்டுகள்), சுவேந்து அதிகாரியிடம் (73,917 ஓட்டுகள்) மண்ணை கவ்வி, 15,105 ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வியை சந்தித்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரி, அந்த தேர்தலிலும், நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
நந்திகிராமிலும் வெற்றி:
திரிணமுல்லின் செல்வாக்குமிகுந்த தொகுதியான, நந்திகிராமிலும் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 9,665 ஓட்டுகள் வித்தியாசத்தில், திரிணமுல் வேட்பாளரை வீழ்த்தி, அங்கும் தனது வெற்றி கொடியை நாட்டியுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire