மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
5 வைகாசி 2026 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 1926
தமிழக மக்கள், மன்னராட்சி மனப்பாண்மைக்கு முடிவு கட்டியதுடன், பணம், ஜாதி, மதம் சார்ந்த அரசியலை துாக்கி எறிந்துள்ளனர்,'' என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், அவர் அளித்த பேட்டி:
கரூரில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த, 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் யார் இருந்தனர்.
எங்கள் கட்சி தலைவருக்கு எதிராக, யார் சதி செய்தனர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தி.மு.க.,வின் குடும்ப ஊழல் ஆட்சி, மன்னராட்சி மனப்பாண்மைக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர்.
எங்கள் கட்சி தலைவர், பெரம்பூரில் தேர் தல் பிரசாரம் செய்துவிட்டு, கொளத்துார் செல்ல இருந்தார்.
ஆனால், காவல் துறையினர் வாயிலாக, நெருக்கடி கொடுத்து, பிரசாரத்தை ரத்து செய்ய வைத்தனர். எங்கள் தலைவர் பிரசாரம் செய்ய, எவ்வளவு நெருக்கடி கொடுத்தனர் என்பதை மக்கள் அறிவர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. அதனால், அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.
தமிழக மக்கள், இந்த தேர்தலில், பணம், ஜாதி, மதம் சார்ந்த அரசியலை துாக்கி எறிந்துள்ளனர். மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவர் என்ற குற்றச்சாட்டை, அடித்து நொறுக்கி உள்ளனர்.
தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள் என, எல்லோரும் எங்கள் தலைவரை, தம்பியாக, அண்ணனாக, மகனாக ஏற்றுக்கொண்டு ஓட்டளித்துள்ளனர்.
குடும்ப நாடக ஊழல் ஆட்சியை துாக்கி எறிந்து, புதிய ஆட்சியை மலர வைத்துள்ளனர். தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கு மேல் கோலோட்சிய கட்சிகளை, மண்ணை கவ்வ வைத்து, புதி ய வரலாறு எழுதி உள்ளனர்.
எங்கள் வெற்றியை, கரூரில் உயிரிழந்த எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழக மக்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire