Paristamil Navigation Paristamil advert login

சீனாவில்திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து - 21 பேர் பலி

சீனாவில்திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து - 21 பேர் பலி

5 வைகாசி 2026 செவ்வாய் 07:53 | பார்வைகள் : 1943


சீனாவின் ஹுனான் மாகாணத்திலுள்ள லியுயாங் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் 05.05.2026 திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 61 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தால் குறித்த கட்டிடம் தரைமட்டமாகிய நிலையில், அதற்குள் சிக்கியே உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் சுற்றளவில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்ததற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்