பாரசீக வளைகுடாவின் மீது பறந்த அமெரிக்காவின் இராணுவ விமானம் மாயம்
5 வைகாசி 2026 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 1995
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகின்றது.
ஈரானுக்கு அருகே பாரசீக வளைகுடாவின் மீது பறக்கும் போது அமெரிக்காவின் இராணுவ எரிபொருள் விமானம் ஒன்று மாயமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க இராணுவ எரிபொருள் விமானம், கத்தார் மேலே பறந்த நிலையில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அந்த விமானம் மத்திய கிழக்கு வான்பரப்பில் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், விமானம் தரையிறங்குவதற்காகக் கீழிறங்கத் தொடங்குவதற்கு முன்பு, சிறிது நேரம் வானத்தில் வட்டமிட்டுள்ளது.
மேலும், அந்த விமானத்தில் இருந்து அவசரநிலை விடுக்கப்பட்டதன் காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சம்பவத்தை எதிரிகளின் நடவடிக்கையுடன் தொடர்புபடுத்தி எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்றே தெரிய வருகிறது.
மட்டுமின்றி, அமெரிக்க ராணுவ விமானத்தின் அவசர நிலைக்கும், அதில் தங்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஈரான் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
விமானத்தின் நிலை குறித்து அமெரிக்க ராணுவமும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. கடந்த மார்ச் மாதம், மேற்கு ஈராக்கில் நடந்த ஈரானியத் தாக்குதலில் அமெரிக்க இராணுவம் தனது கேசி-135 ரக விமானம் ஒன்றை இழந்தது.
இதற்கு ஈரான் ஆதரவு ஆயுதக் குழு ஒன்று பொறுப்பேற்றிருந்தது. தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் வான்வெளியைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்த விமானத்தை வீழ்த்தியதாக அந்தக் குழு கூறியிருந்தது.
கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானமானது, பின்னோக்கி வளைந்த இறக்கைகளின் கீழ் பொருத்தப்பட்ட நான்கு டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படும் ஒரு இராணுவ விமானமாகும்.
இது முக்கியமாக வானில் எரிபொருள் நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தில் எரிபொருள் நிரப்பும் அமைப்புக்கு மேலே ஒரு சரக்குத் தளம் உள்ளது.
அது பயணிகளையும் உபகரணங்களையும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பதுடன், நடுவானில் பறக்கும் மற்ற விமானங்களுக்கு எரிபொருளை மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விமானம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க விமானப்படையின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire