தமிழகத்தின் நலனில் அக்கறை; பிரதமர் மோடி, ராகுலுக்கு விஜய் நன்றி
6 வைகாசி 2026 புதன் 07:41 | பார்வைகள் : 1621
தமிழகத்தின் நலனில் அக்கறை கொள்வோம் என்று பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. தவெகவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நடிகர் விஜய்க்கு எக்ஸ் வலைதள பதிவில் வாழ்த்துக் கூறி இருந்தார்.
இந் நிலையில் அவரின் வாழ்த்துகளுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் வலை தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திலும் தமிழக மக்களின் நலன்களிலும் முழுமையாக கவனம் செலுத்துவோம். இதில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
ராகுலுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு;
தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தமைக்கு உளமார்ந்த நன்றிகள். மக்களுக்கான சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் ஒத்துழைப்புடன் கலாசார விழுமியங்களை பேணிக்காப்பதிலும் உறுதியுடன் செயல்படுவோம். அரசியலை கடந்து, தமிழக மக்களின் நலன்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire