தமிழகத்தில் புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழி; சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு
7 வைகாசி 2026 வியாழன் 11:37 | பார்வைகள் : 1689
தமிழகத்தில் புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம் என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அவரது பதிவு: ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகள் யாருக்கும் கிடைக்கவில்லை. அப்படி அமைக்கப்படும் எந்த அரசும் பல்வேறு இழுபறிகள், அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும். ஜனாதிபதி ஆட்சியுடன் புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம், இம்முறை ஓட்டுக்குப் பணம் இல்லை என்ற மிகக் கடுமையான நடவடிக்கை இருக்க வேண்டும். அப்போது யாருக்கு சாதகமாக உண்மையாக மக்கள் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நான் நினைக்கிறேன். அதை திமுக, அதிமுக தடுக்க விரும்பினால், அவர்கள் ஒன்றாகப் போராடட்டும். பாஜ தனித்துப் போட்டியிட வேண்டும், அது ஒரு இடத்தைக் கூடப் பெற முடியாமல் போனாலும் பரவாயில்லை. தமிழகத்தில் பாஜ ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. மக்கள் புதிதாகத் தீர்மானிக்கட்டும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire