Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணை திறக்க வேண்டும் ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை திறக்க வேண்டும்  ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

7 வைகாசி 2026 வியாழன் 08:44 | பார்வைகள் : 1979


மத்திய கிழக்கில் பதற்றநிலை நிலவி வருகின்றது.

மேலும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது அதிகப்படியான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டால் இந்தப் போர் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும், எரிபொருள் விநியோகம் மீண்டும் தொடங்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் மீண்டும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3