Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதல் - ஜெலன்ஸ்கி கண்டனம்

உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதல்  - ஜெலன்ஸ்கி  கண்டனம்

7 வைகாசி 2026 வியாழன் 09:38 | பார்வைகள் : 1627


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ராணுவ நடவடிக்கை தற்போது தொடர்ந்து நீடித்து வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மீண்டும் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 2ஆம் உலகப் போர் வெற்றி தின நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா தயாராகி வரும் சூழலில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வழங்கிய பின்னரும் தாக்குதல் நடத்துவது ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

ஜபோரிஜ்ஜியா, டோனெட்ஸ்க், கார்கீவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் பொல்தவா உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் குடியிருப்புகள், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3