முதுகில் குத்தியது காங்கிரஸ்; திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டனம்
8 வைகாசி 2026 வெள்ளி 08:10 | பார்வைகள் : 1841
கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு அல்ல, தேர்தல் நடக்கும் போதே, காங்கிரஸ் கட்சி உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், பாஜ மற்ற மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழகத்தில் நமக்கு செய்துள்ளதாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்கு துரோகம் செய்து முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்திற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தின் அரசியல் சூழலை ஆராய்ந்து உடனடி முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire