தமிழக முதல்வராக விஜய் விரைவில் பதவி ஏற்பார்: ரங்கசாமி உறுதி
8 வைகாசி 2026 வெள்ளி 10:23 | பார்வைகள் : 2009
தமிழக முதல்வராக த.வெ.க., தலைவர் விஜய் விரைவில் பதவி ஏற்பார் என, ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. புதிய அரசு அமைவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, முதல்வர் ரங்கசாமி மக்கள் மாளிகைக்குச் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
பின், ரங்கசாமி கூறுகையில், 'புதிய ஆட்சி அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் புதிய அரசு பொறுப்பேற்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை முறைப்படி கவர்னரிடம் சமர்ப்பிப்பேன்' என்றார்.
அப்போது, தமிழகத்தில் த.வெ.க., அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைப்பதில் நிலவும் சில சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குல ரங்கசாமி, த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் மிக விரைவில் தமிழக முதல்வராகப் பதவியேற்பார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உறுதி' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire