திரையுலகினர் விஜய்க்கு ஆதரவாக குரல்!
8 வைகாசி 2026 வெள்ளி 13:21 | பார்வைகள் : 2046
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக., கட்சியினர் அதிக இடங்களை பெற்று ஆட்சியை அமைக்க மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் அவரால் ஆட்சி அமைக்க முடியாத குழப்பம் நிலவி வருகிறது. மாறாக அதிமுக.,வும், திமுக., இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் திரையுலகினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர், மநீம., தலைவர் கமல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் 'மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்' என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். 'பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆக வேண்டும்.
நடிகர் விஷால்
நடிகர் விஷால் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் வெளியிட்ட மற்றொரு பதிவு, ‛‛ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்காமல் போய்விட்டால் அல்லது யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத திமுக - அதிமுக கூட்டணி என்ற அதிர்ச்சிகரமான மாற்றமாகவோ இருந்தால், அதன் விளைவு பொதுமக்களிடையே பெரும் பேரழிவையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று ஒரு குடிமகனாகவும், வாக்காளராகவும் நான் கருதுகிறேன். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்"
இயக்குனர் பேரரசு
அதிமுக, தவெகவிற்கு ஆதரவாகவோ, இல்லை ஒதுங்கியோ இருந்து விட்டால் அடுத்த தேர்தலில் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பிருக்கிறது! திமுக ஆதரவோடு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தால் இதுதான் அதிமுகவின் கடைசி ஆட்சியாக இருக்கும்! அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் போல், திமுகவிடமோ அல்லது தவெகவிடமோ சீட்டு கேட்கும் நிலைமைதான் வரும்! நல்லதோ, கெட்டதோ சசிகலாவிற்கு துரோகம் செய்தீர்கள்! ஆனால் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தீர்கள், மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்!
நடிகர் ஸ்ரீமன்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக அவர் நண்பர் நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட கருத்து : நாம் ஊதும் விசிலின் காற்று வெறும் வாயிலிருந்து வருவதல்ல, அது நம் இதயத்திலிருந்து வருவது. அந்தச் சத்தம் இறைவனின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் பொறுமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. முறையான சட்டப்பூர்வமான முயற்சிகளாலும், இறைவனின் ஆசீர்வாதத்தினாலும்... 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' என்று நீங்கள் சொல்லும் நாள் வரும். நம் பிரார்த்தனைகள் மிகவும் வலிமையானவை".
நடிகை கஸ்தூரி
எந்த தவறும் செய்யாமல் பாஜக பழிக்கு மட்டும் ஏன் ஆளாக வேண்டும்? ஆனால் இப்பொழுது அதுதான் நிலமை . தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது, எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது ஆளுநரின் கடமையாகும்.
இதை தாமதப்படுத்தும் எந்த செயல்பாடும் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமன்றி மற்றவர்களாலும் ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும். அதற்கு பாரதிய ஜனதா கட்சியே (BJP) முழு காரணம் என்று சந்தேகம் வரும். விஜய்யின் பாதையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தடையும், அரசியலமைப்பு ரீதியிலான தாமதமாகக் கருதப்படாது; அது பாரதிய ஜனதா கட்சி யின் மறைமுக அரசியலாகவே பார்க்கப்படும்—உண்மையில் அப்படி இல்லையென்றாலும் கூட.
ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டின் அடுத்த அரசு அமைவதில் தான் குறுக்கே நிற்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே பாஜகவை மட்டுமே மக்கள் சந்தேகிப்பார்கள். எனவே, எந்தவித இடையூறும் இன்றி புதிய அரசு அமைவதை விரைவுபடுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் சொந்த நலனுக்கே உகந்ததாகும்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire