Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை - மூவர் பலி

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை - மூவர் பலி

8 வைகாசி 2026 வெள்ளி 19:00 | பார்வைகள் : 2154


இந்தோனேசியா நாட்டிலுள்ள எரிமலை ஒன்றைக் காண அங்கு 20 பேர் அடங்கிய கூட்டம் ஒன்று சென்றிருந்த நிலையில் எரிமலை திடீரென வெடித்துச் சிதற, மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.

இந்தோனேசியாவிலுள்ள Mount Dukono என்னும் எரிமலை 08.05.2026 அதிகாலை வெடித்துச் சிதறியுள்ளது.

எரிமலைச் சாம்பல் சுமார் 10 கிலோமீற்றர் உயரத்திற்கு வானில் வீசப்பட்ட நிலையில், அங்கு மலையேற்றத்துக்குச் சென்றிருந்த ஒரு கூட்டம் மாயமாகியுள்ளது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் செல்ல, மூன்று பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அங்கிருந்த மற்றவர்களில் 15 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர் மீட்புக் குழுவினர்.

அங்கு சிக்கியிருக்கும் உடல்களை மீட்க உதவி தேவை என்பதால், அந்தக் குழுவிலுள்ள இரண்டு பேர் மீட்புக் குழுவினருடன் தங்கியுள்ளார்கள்.

எரிமலையைக் காணச் சென்ற 20 பேரில் 9 பேர் வெளிநாட்டவர்கள், 11 பேர் உள்ளூர்க்காரர்கள். அவர்களில் இரண்டு வெளிநாட்டவர்களும், ஒரு உள்ளூர்க்காரரும் உயிரிழந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் சம்பவம் நடந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக எச்சரிக்கையையும் மீறி அந்த 20 பேரும் அந்த எரிமலைக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3