தோல்வியை தாங்கமுடியாத திரிணமுல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் வன்முறை!
10 வைகாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 1892
பொதுவாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் போது ஏகப்பட்ட அடிதடிகள் நடக்கும். ஆனால், இந்த முறை தேர்தலின் போது எந்த வன்முறையும் நடக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தன் சொந்த தொகுதியிலேயே தோற்ற பின், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
முதல்வர் சுவேந்து அதிகாரியின் செயலர் சுட்டுக் கொல்லப்பட்டார். சில இடங்களில், திரிணமுல் காங்., அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பா.ஜ., தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.
இதற்கெல்லாம் காரணம், 'திரிணமுல் காங்கிரசும், மம்தா பானர்ஜியும் தோல்வியை ஏற்க மறுப்பது தான்' என, சொல்லப்படுகிறது. 'முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்' என, அடம்பிடித்தார் மம்தா.
இதற்கிடையே, மத்திய உளவுத் துறையின் அறிக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டு உள்ளதாம். அதில், 'திரிணமுல் காங்., தொண்டர்கள் நெற்றியில் திலகமிட்டு காவி உடை அணிந்து தாக்குதல் செய்துள்ளனர். பா.ஜ.,வினர் தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதற்காக, மம்தா செய்த காரியம் இது' என, சொல்லப்பட்டு உள்ளதாம்.
இதுவரை, 200 முதல் தகவல் அறிக்கைகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலர் கொல்லப்பட்டதை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரியின் முதல் வேலையே, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது, மக்களிடையே உள்ள அச்சத்தை போக்குவது தான்' என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire