உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது - புட்டின் அறிவிப்பு
10 வைகாசி 2026 ஞாயிறு 13:03 | பார்வைகள் : 2252
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரைனுடனான மோதல் முடிவுக்கு வருவதாக தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைனில் நடைபெற்று வரும் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக புlட்டின் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்சியாக வழங்கி வரும் ஆதரவுதக்குறித்து இந்நிகழ்வில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த கடைசி நேர போர்நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பின் போது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் இல்லாமல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்நிகழ்வு நிறைவுற்றுள்ளதாக புட்டின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆற்றிய உரையில், ரஷ்யா ஒரு "நீதியான" போரை நடத்துவதாகக் கூறிய புட்டின், உக்ரைனை ஒரு "ஆக்கிரமிப்பு சக்தி" என்றும், அதற்கு நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
"மேற்கத்திய நாடுகள் முதலில் உதவி செய்வதாகக் கூறிவிட்டு, பின்னர் ரஷ்யாவுடனான மோதலைத் தூண்டிவிட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. இப்போது இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருகிறது, ஆனால் இது மிகவும் தீவிரமான விஷயம்," என புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் வினவப்பட்டபோது, நீண்ட கால வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே அத்தகைய சந்திப்பு நடக்கும் என புடின் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், இச்சந்திப்பு "மற்றொறு நாடொன்றில் நடக்கலாம், ஆனால் அது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு கடைசி கட்ட நடவடிக்கையாக மட்டுமே இருக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அதற்கு ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி கெர்ஹார்ட் ஷ்ரோடரை தனது விருப்பத்திற்குரிய பேச்சுவார்த்தை கூட்டாளியாகப் புட்டின் அடையாளப்படுத்தியுள்ளார்.
வார இறுதியில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இருப்பினும், இது தொடர்பாக உக்ரைனிடமிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை என புடின் சனிக்கிழமை சுட்டிகாட்டியுள்ளார் .
கடந்த இரு தசாப்தங்களில் இல்லாதவாறு, இம்முறை அணிவகுப்பில் ஏவுகணைகள் போன்ற இராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. மேலும், சர்வதேச ஊடகவியலாளர்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மிகக் குறைந்த அளவிலான செய்தியாளர்களே இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செய்தி தொகுப்பு
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire