முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்த 21 வயது பாகிஸ்தான் வீரர்
10 வைகாசி 2026 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 2110
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸான் அவைஸ் சதம் அடித்தார்.
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி தமது முதல் இன்னிங்ஸில் 413 ஓட்டங்கள் குவித்தது. நஜ்முல் ஹொசைன் 101 ஓட்டங்களும், மொமினுல் ஹக் 91 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அறிமுக வீரராக களமிறங்கிய அஸான் அவைஸ் (Azan Awais) சதம் அடித்தார். அவர் 14 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 3வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அஸான் பெற்றார்.
தற்போதுவரை பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ஓட்டங்கள் குவித்துள்ளது. சல்மான் அஹா (48), மொஹம்மது ரிஸ்வான் (36) இருவரும் களத்தில் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire