எரிபொருள் விலை உயர்வு : 8‑மே நீண்ட விடுமுறைக்கு அஞ்சும் பிரெஞ்சு மக்கள்!
10 வைகாசி 2026 ஞாயிறு 11:21 | பார்வைகள் : 4689
எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததால், 8‑மே நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தும் பல பிரெஞ்சு மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தங்கும் குறுகிய பயணங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
அதற்கான ஒரு உதாரணம் :
Audrey (Gironde)
அவர் தனது வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய Gironde பகுதியில் தங்க முடிவு செய்துள்ளார்.
“எங்களுக்கு ஓய்வு வேண்டும், அதே நேரத்தில் அதிக செலவு செய்ய விரும்பவில்லை.
எரிபொருள் விலை — அது உண்மையிலேயே ஒரு முக்கியமான காரணம்.”
Gironde பகுதியில் உள்ள EcÔtelia தங்கும் இடத்தின் பொறுப்பாளர் தெவிவித்த கருத்தின்படி
“மே மாத நீண்ட விடுமுறைகளில் பொதுவாக தூரத்திலிருந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்”
“ஆனால் இந்த முறை பெரும்பாலும் உள்ளூர் வாடிக்கையாளர்களே அதிகம்”
'வாடிக்கையாளர்களில் 50% பேர் , 80 முதல் 100 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள்"
என்றுள்ளார்.
இந்த 8‑மே நீண்ட விடுமுறைக்கு :
எரிபொருள் விலை உயர்வு
செலவைக் குறைக்க வேண்டிய அவசியம்
வீட்டிற்கு அருகிலேயே ஓய்வு பெறும் விருப்பம்
இவற்றின் காரணமாக பிரெஞ்சு மக்கள் குறுகிய தூர பயணங்களை அதிகமாகத் தேர்வு செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire