மது விற்பனை அரசின் பணியாக இருக்க கூடாது: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்
13 வைகாசி 2026 புதன் 11:54 | பார்வைகள் : 1757
மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நடிகர் கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுபானம் விற்பனை அரசின் பணியாக இருக்க கூடாது என கமல் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகேயுள்ள மது விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் விஜய் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மது விற்பனை ஓர் அரசின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire