திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல் - 30 பேர் பலி
10 சித்திரை 2026 வெள்ளி 16:09 | பார்வைகள் : 2268
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. தற்போது, தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, துணை இராணுவப்படையான Rapid Support Forces அமைப்பின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்படுகிறார். இராணுவத்துக்கும் RSF அமைப்பிற்கும் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்ததன் விளைவாக, 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் கடும் ஆயுத மோதல்கள் வெடித்தன.
இதில் தலைநகரான கார்டூம் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், RSF கட்டுப்பாட்டில் இருந்த கார்டூமை இராணுவம் மீண்டும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில், டார்பூர் மாகாணத்தில் உள்ள குடும் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை Sudanese Armed Forces மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அக்கறை அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire