தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் கோபிநாத் காலமானார்
10 சித்திரை 2026 வெள்ளி 16:13 | பார்வைகள் : 1739
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கோபிநாத் காலமானார்.
சென்னையை சேர்ந்த 96 வயதான கோபிநாத் இந்திய அணிக்காக 1951 முதல் 1960 வரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், 83 முதல்தர போட்டிகளில் விளையாடி, 4,259 ஓட்டங்களும் 14 விக்கெட்களும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 234 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
1951ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில், 8வது விக்கெட்டுக்கு இறங்கி 50 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இவரது 5வது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவின் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்ற அணியில் இருந்த கடைசி நபரான கோபிநாத்தும் தற்போது காலமாகியுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் 2வது வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்திருந்தார்.
1948 முதல் 1963 வரை அவுஸ்திரேலியா அணிக்காக ஆடிய 97 வயதான நீல் ஹார்வி முதல் நபராக உள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire