தொடருந்து பாதையில் பாய்ந்த நபர் உயிரிழப்பு - RER D சேவை முற்றிலும் பாதிப்பு!!
10 சித்திரை 2026 வெள்ளி 17:10 | பார்வைகள் : 4790
Garges-Sarcelles தொடருந்து நிலையத்தில் இன்று 10ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் நேரத்தில் ஒருவர் தொடருந்து பாதையில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தால் RER D தொடருந்து சேவையில் கடுமையான தடை ஏற்பட்டதாக SNCF தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் சுமார் காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் மற்றும் இறுதிச்சடங்கு சேவை குழுக்கள் விரைவாக சென்றடைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் உறுதியாக தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து, RER D தொடருந்து சேவை Stade de France மற்றும் Goussainville இடையே இரு வழித்தடங்களிலும் முற்றாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பலர் சிரமத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், Garges - Sarcelles , Villiers-le-Bel மற்றும் Pierrefitte Stains ஆகிய நிலையங்களில் மதியம் 2 மணி வரை தொடருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் பிற்பகல் 1 மணியளவில் சேவை வழமைக்கு திரும்பத் தொடங்கியதாக SNCF தெரிவித்துள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire