சமூக நல உதவிகளில் பெரும் மோசடி – 6 ஆண்டுகளில் 450,000 யூரோக்கள் வரை திருட்டு!!
12 சித்திரை 2026 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 3446
D’Évry-Courcouronnes (Essonne) குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது அமைப்புசார்ந்த மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. சமூக நல உதவித்தொகைகளை இலக்காகக் கொண்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டதாக அவர்கள் மீது சந்தேகம் நிலவுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணை நடைபெற இருந்த நிலையில், வழக்கறிஞரின் கோரிக்கையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறந்து, பணமில்லா காசோலைகளை வெளியிட்டு முதற்கட்டமாக மோசடி செய்துள்ளனர். பின்னர் CAF போன்ற சமூக நல கொடுப்பனவுகளில், RSA, APL போன்ற திட்டங்களின் கீழ் சுமார் 100,000 யூரோக்கள் வரை சட்டவிரோதமாக பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் பல குடும்ப நல அலுவலகங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமூக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சிறு தொழில் கடன் திட்டங்களையும் போலி அடையாளங்களின் மூலம் தவறாக பயன்படுத்தி, மொத்தம் 4,44,000 யூரோக்கள் வரை பணத்தை திருடி வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் தற்போது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எதிர்வரும் விசாரணையில் இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire