ஸ்டாலின் கட்சி, கனிமொழி கட்சி என தேர்தலுக்கு பின் தி.மு.க., பிரியும்: அண்ணாமலை
12 சித்திரை 2026 ஞாயிறு 06:24 | பார்வைகள் : 1442
தமிழகத்தில், இனி ஜென்மத்துக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வராது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
தி.மு.க.,வினர் ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தேன். உதாரணமாக, அமைச்சர் காந்தியின் வேட்டி, சேலை ஊழல்; அவரின் 160 கோடி ரூபாய் ஊழல் குறித்து ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.
பா.ஜ., அலுவலகம் வந்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறட்டும். புழல் சிறையில் அவர்களுக்கு தனி 'பிளாக்' கட்டப்படும்.
விஜயின், ஜனநாயகன் திரைப்படம் இணைய தளத்தில் 'லீக்' ஆன விவகாரத்தில், மத்திய அமைச்சர் முருகனை தொடர்புபடுத்தி பேசுவது வன்மத்தின் உச்சகட்டம். தேர்தலில் தி.மு.க., தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என பிரியும். யாரிடம் தி.மு.க., செல்லும் என்று யாருக்குமே தெரியாது.
செந்தில் பாலாஜியும், கனிமொழியிடம் சேர்வதா அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார்.
இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.
காங்கேயத்தில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த அண்ணாமலை பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில், 8,000 கொலை நடந்து உள்ளது; 31,900 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. இதைத் தவிர, மற்றதை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கிறார்.
கனிமொழியின் பிரச்னை என்னவென்றால், கனவில் வருவதை கூட உண்மை என நினைத்துக் கொண்டு காலையில் மைக்கில் பேசுகிறார்.
வளைகுடா போரால், இந்தியாவில் பாதிப்பு வராமல், மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது . தி.மு.க.,வினருக்கு பொது அறிவு வீக், இதை சொன்னால் புரியாது. பழனிசாமியை திட்டுவதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire