பொது சிவில் சட்டம் குறித்து இபிஎஸ் கருத்து என்ன? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
13 சித்திரை 2026 திங்கள் 10:27 | பார்வைகள் : 1476
பொது சிவில் சட்டம் குறித்து இபிஎஸின் கருத்து என்ன? அவர் கருத்து சொல்வாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இறந்த தலைவர்களை கொச்சைப்படுத்திபேசுகிறார் அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்துபேசுவது அவரின் கடமையாக இருக்கிறது. பெண்களை கண்ணியமா க பேசுவதை தொடர்ந்து செய்கிறார். வாய்க்கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வரும் வார்த்தைகளுக்க பாடம் புகட்டும் நாள் ஏப்.23.
கொள்கையற்ற அடிமை கூட்டத்தை சுயநலத்துக்காக தமிழகத்துக்காக அடகு வைக்கும் துரோக கூட்டத்தை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழகத்தை உயர்த்திய திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில் திராவிட மாடல் அரசு என்பது வரலாற்றில் நிற்கும் திட்டம் அல்ல. புது வரலாற்றை படைக்கக்கூடிய திட்டங்கள்.
வெறும் புள்ளி விவரங்களில்மட்டுமல்ல கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்ட சாதனை சரித்திரம் தான் திராவிட மாடல். சொன்னதை உறுதியாக செய்வேன். சொல்லாததை அதிரடியாக செய்வேன். அதனால் தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி, தெற்கு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். அப்படி வழிகாட்டக்கூடிய தெற்கை வஞ்சிக்கிற செயலில் மத்திய பாஜ அரசு இறங்கிஉள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை காட்டி, மத்தியில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி நடக்கிறது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்க பார்க்கின்றனர். இதனை ஜனநாயக இயக்கங்கள் எதிர்க்கப் போகிறோம். இந்த அநியாயத்தை எதிர்க்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் இபிஎஸ்க்கு இருக்கிறதா? மற்றவற்றுக்கு வாய் கிழிய பேசும் இபிஎஸ், பாஜ அட்டூழியங்களை எதிர்க்க சொன்னால் சைலன்ட் மோடுக்கு போய் விடுகிறார்.
மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேசுவது என்றால் பயத்தில் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறார். அவர் எதற்கு பிரசாரம் செய்கிறார் என்றால், இப்படிப்பட்ட அடிமை உலகத்தில் யாரும் பார்த்தது இல்லை என்ற கின்னஸ் சாதனை படைக்க பிரசாரம் செய்கிறார். அவரின் ஓனர் பாஜ.பாஜவுக்கு தமிழகம் மீது வரும் அரசியல் அக்கறை என்பது அரசியல் ஸ்டன்ட் மட்டும் தான். அவர்கள் செய்வது ராஜதந்திரம் அல்ல. இரட்டை தந்திரம்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வெளியிட்ட பாஜ, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளது. நமது பன்முகத்தன்மைக்கு விடப்பட்டுள்ள நேரடியான சவால். மேற்கு வங்கத்தில் விடப்பட்டுள்ள சவால், தமிழகத்தில் விட முடியவில்லை. ஏனென்றால், தமிழகத்தை பாதுகாப்பது திராவிட பெருஞ்சுவர். இந்த தமிழ் கோட்டையை சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம். இதனால், தான் நமது கையை எடுத்து நமது கண்ணை குத்த அதிமுகவை தேர்வு செய்துள்ளனர்.
பாஜவை அழைத்து வருவதற்கான பல்லக்கு தூக்கியாக மாறியுள்ளவர் தான் இபிஎஸ். தமிழகத்துக்கு வரும் பாஜ அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என பேசுகின்றனர். இதனை இபிஎஸ் கண்டித்துள்ளாரா? தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டுள்ளது இதனை கண்டித்து ஒரு வார்த்தையாவது இபிஎஸ் பேசி உள்ளாரா? பொது சிவில் சட்டம் குறித்தஇபிஎஸ் நிலைப்பாடு என்ன?இது குறித்து கருத்து சொல்வாரா?
காலில் விழுந்து காலை வாரிவிட்ட இபிஎஸ், சொந்த மக்களுக்கு துரோகம் செய்கிறார். இதுதான் இபிஎஸ் செய்த பச்சைத்துரோகம். அவர் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் என்பது ஊழல்களும் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் இருண்ட ஆட்சி காலம்.
பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி.கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி.கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி. அனைத்துமே எதிர்மறையாக தான் இருக்கிறது.தவறுக்கு மேல் தவறு செய்தஇபிஎஸ், தனது தவறுகளில் இருந்துதப்பிக்க சரண் அடைந்த இடம் தான் பாஜவின் வாஷிங்மெஷின்.
அவர் தவறுகளில் இருந்து தப்பிக்க விட்டுக் கொடுத்தது தான் தமிழகத்தின் உரிமைகள். தனிமனிதனை விட தமிழகம் தான் பெரியது. தமிழகத்தை வட்டமிடும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்.அதனால் தான் தமிழகம் வெர்சஸ் டில்லி என சொல்கிறேன். பத்து தோல்வி இபிஎஸ்க்கு 11வது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும்.டபுள் இன்ஜீன், டப்பா இன்ஜீனுக்கு அடிமைகள் தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடாது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது தமிழகம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire