Drancy நகராட்சியில் கொடுப்பனவு சர்ச்சை : மேயரின் மனைவிக்கு அதிக சலுகை?
12 சித்திரை 2026 ஞாயிறு 16:50 | பார்வைகள் : 2885
Drancy நகரில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இது சட்ட வரம்புக்குள் உள்ளதாக கூறினாலும், எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வருகின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Jean-Christophe Lagarde சமீபத்தில் மீண்டும் மேயராக பதவி ஏற்ற நிலையில், அவரது மனைவியும் 12வது துணை மேயருமான Aude Lagarde அதிகமான கொடுப்பனவு பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதம் சுமார் 4,785 யூரோ வழங்கப்படுவது மற்ற துணை மேயர்களைவிட அதிகம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இருப்பினும் மொத்த கொடுப்பனவு வரம்பை மீறாத வரை இது சட்டபூர்வமானது என நகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், மக்களின் கருத்துகள் வேறுபட்டுள்ளன. சிலர் Aude Lagarde முன்னாள் மேயராக செய்த சேவைகளை நினைவுகூர்ந்து ஆதரிக்கின்றனர்; மற்றவர்கள் இதை உறவினருக்கான முன்னுரிமை என விமர்சிக்கின்றனர். இதேவேளை, Aulnay-sous-Bois, Champigny-sur-Marne மற்றும் Versailles போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், இத்தகைய கொடுப்பனவு வேறுபாடுகள் அங்கு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire