அபாயகரமான சாகச ஓட்டம் - திருமணம் இரத்து!
12 சித்திரை 2026 ஞாயிறு 21:22 | பார்வைகள் : 3477
Montpellier நகரில், திருமண ஊர்வலத்தில் நடந்த அபாயகரமான சாலைச் செயல்கள், சாகச ஓட்டம் (rodéos urbains) மற்றும் போக்குவரத்து குழப்பங்கள் காரணமாக,
மாநகர முதல்வர் Michaël Delafosse ஏப்ரல் 11 சனிக்கிழமை நடைபெற இருந்த ஒரு திருமணத்தை இரத்து செய்தார்.
திருமண ஊர்வலத்தில் இருந்த சிலர் அதிக வேகத்தில் ஓட்டுதல், அபாயகரமான சாகச ஓட்டம் (rodéo urbain), சாலையை மறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
நகராட்சி இதை பொது ஒழுங்குக்கு எதிரான செயல்கள் எனக் கருதி, திருமண விழாவை உடனடியாக இரத்து செய்தது.
வீடியோ கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு,காவல்துறையால் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும்.
தண்டனைகள்:
பறிமுதல் செய்யப்பட்டு வானத்தடைத் தரிப்பத்தில் ( fourrière) வைக்கப்படும்.
போக்குவரத்திற்கு இடையூறு அல்லது தடுக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 4,500 யூரோ அபராதம் விதிக்கப்படும்
ஓட்டுநர் உரிமத்தில் புள்ளிகள் குறைக்கபடும்.
2024 ஒக்டோபரில் இதே காரணத்தால் ஒரு திருமணம் ரத்து செய்யப்பட்டது.2023 இலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.
2020 முதல், Montpellier நகரில் திருமணச் சாசனம் கட்டாயமாக கையொப்பமிடப்படுகிறது. அதில், பொது ஒழுங்கு குலைந்தால் திருமணத்தை நிறுத்தலாம் அல்லது இரத்து செய்யலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire