பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும்
12 சித்திரை 2026 ஞாயிறு 22:10 | பார்வைகள் : 2814
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ள நிலையில், பிரான்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரோன்சுவா ஒல்லோந்த் (François Hollande) பிரான்ஸ் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் வரலாற்று ரீதியாக இந்த பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிரான்சுக்கு அங்கு எந்த தனிப்பட்ட நலனும் இல்லை, அதன் ஒரே நோக்கம் அமைதியைப் பாதுகாப்பதும், உரிமைகளை மதிக்கச் செய்வதும்.
அதனால், பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“லெபனானில் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்; இது தாங்க முடியாதது.”
இந்த தாக்குதல்கள் பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்றன.
லெபனான் ஒரு சுயாட்சி நாடு,சுதந்திரமான தேர்தல்கள் கொண்டது, மேலும் பிரான்சுக்கு நெருக்கமான நாடு.
இஸ்ரேல், தெற்கு லெபனானில் இருந்து தாக்கும் Hezbollah-க்கு பதிலளிப்பது புரிந்துகொள்ளத்தக்கது,
ஆனால் “இவர்கள் குறிவைத்ததாகக் கூறும் தாக்குதல்கள் உண்மையில் பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கின்றன” எனவும் பிரோன்சுவா ஒல்லோந்த் தெரிவித்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire