கோவை தெற்கு தொகுதி மக்களை கொட்டகைக்குள் அடைக்கும் தி.மு.க. !
14 சித்திரை 2026 செவ்வாய் 06:19 | பார்வைகள் : 1530
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொட்டகை அமைத்து பொதுமக்களை வரவழைத்து, 8,000 ரூபாய் கூப்பன் ஆசை காட்டி, படிவம் பூர்த்தி செய்து பெறுவதாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் நேற்று புகார் கொடுத்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரிடம் புகார் அளித்த பின், அம்மன் அர்ஜுனன் அளித்த பேட்டி:
கோவையில், எங்கு பார்த்தாலும் கொட்டகை அமைத்து, ஆடு, மாடு போல் மக்களை அடைக்கின்றனர். ஒரு டிவிஷனில் குறைந்தபட்சம் 3 கொட்டகைகள் அமைத்துள்ளனர். தெற்கு, வடக்கு தொகுதிகளில் கொட்டகை போட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு கூப்பன் கொடுத்ததை பிடித்து கொடுக்கிறோம்; போலீஸ் வழக்கு பதிந்திருக்கிறது. கொட்டகையை மூட வேண்டும்; மக்களை மக்களாக இருக்க விட வேண்டும்.
சிறிய கொட்டகையாக இருந்தால், 300 பேரை அடைக்கின்றனர்; சாப்பாடு கொடுத்து சம்பளம் தருகின்றனர். எங்களது பிரசாரத்துக்கு யாரும் செல்லக்கூடாது என்பதற்காக அடைத்து வைக்கின்றனர்.
கூப்பன் கொடுத்தது தொடர்பாக புகார் கொடுத்தவரின் மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருக்கின்றனர். எதற்காக அவரை வரவழைக்க வேண்டும்?
ஆதாரப்பூர்வமாக பிடித்துக் கொடுத்திருக்கிறோம். அப்பெண்ணை கையை பிடித்து இழுத்ததாக எழுதித்தரச் சொல்லி இருக்கின்றனர். அதெல்லாம் முடியாதென அந்த பெண் சென்று விட்டார். தி.மு.க.,வினருக்கு போலீசார் சப்போர்ட் செய்கின்றனர்.
நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறியுள்ளார். நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம்; கரூரில் செய்ததை இங்கு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரிடம் அளித்த மனுவில் அம்மன் அர்ஜுனன் கூறியிருப்பதாவது:
தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கூப்பனில் குறிப்பிட்டுள்ள பொருட்களில் 8,000 ரூபாய் மதிப்புக்கான பொருட்களை இலவசமாக பெறலாம்' என ஆசை வார்த்தை கூறி, கையெழுத்து பெறுகின்றனர்.
கோவை ராம் நகர், 67வது வார்டு, விவேகானந்தா ரோடு, கே.எம்.சி.ஹெச்.சிட்டி சென்டர் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்களிடம் தி.மு.க., பகுதி கழக செயலர் சேதுராமன், ராமமூர்த்தி, மெஜஸ்டிக் சின்னராஜ், மகளிரணி கண்ணம்மாள் மற்றும் இரண்டு பெண்கள், கூப்பன் கொடுத்து, உறுதிமொழி கையெழுத்து பெற்று உள்ளனர்.
அப்போது, அ.தி.மு.க., கிளை செயலர் ரவிராஜ் வக்கீல்கள் மூலம், இதுதொடர்பாக, தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire