ஐபிஎல் வரலாற்றிலே மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
14 சித்திரை 2026 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 1673
ஐபிஎல் வரலாற்றிலே ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணிகள் மோதியது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய SRH அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.
217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய RR அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
தன் மூலம், SRH அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்கத்தில் அடுத்தது விக்கெட்டுகளை இழந்த RR அணி, ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
முதல் ஓவரை அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே வீச, 2வது ,4வது ,6வது பந்துகளில் வைபவ் சூரியவன்ஷி(0), துருவ் ஜூரல்(0), பிரிட்டோரியஸ்(0) என 1 ஓட்டங்கள் குடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
1/3 என்ற மோசமான நிலையில் அணி இருக்க அடுத்து சாகிப் ஹுசைன் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால்(1) ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் வரலாற்றிலே முதல் 10பந்துகளிலே 4 விக்கெட்டுகளை இழந்த மோசமான சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் படைத்தது.
2/4 என்ற நிலையில் 3வது ஓவரை மீண்டும் பிரஃபுல் ஹிங்கே வீச ஒரு பவுண்டரி அடித்த ரியன் பராக் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 18வது பந்திலே 5வது விக்கெட்டையும் இழந்தது.
முன்னதாக, 2011 ஆம் ஆண்டில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொச்சி டஸ்கர்ஸ் அணி, 11 பந்துகளில் 4 விக்கெட்களை இழந்ததும், 19பந்துகளில் 5 விக்கெட்டை இழந்ததும் மோசமான சாதனையாக இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire